சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் பிச்சைக்காரன். குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி ஹிட்டடித்த படங்களில் பிச்சைக்காரன் படமும் ஒன்று.
தமிழில் 15 கோடி வரை வசூலித்து இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. வெளியான 52 நாட்கள் முடிவில் இப்படம் 18 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய லட்சுமணன் சதலவாடா விளம்பரத்திற்கு ஒன்றரை கோடி, படத்திற்கு 50 லட்சம் என மொத்தமாக 2 கோடிகளை செலவு செய்திருந்தார். தற்போது படம் நன்றாக ஓடியதால் 13 கோடிகள் வரை அவருக்கு லாபம் கிடைத்திருக்கிறதாம்.
0 comments:
Post a Comment