கோலிவுட்டில் வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் ரிலிஸ் ஆகின்றது. இதில் இந்த வருடம் தற்போது வரையே 120 படங்கள் வரை ரிலிஸ் ஆகிவிட்டதாம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த் வருடம் வந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை பார்த்து வருகிறோம். இந்நிலையில் முதல் நாள் வசூலில் இடம்பிடித்த டாப் 5 படங்கள் பற்றி பார்ப்போம்.
எல்லோரும் எதிர்ப்பார்த்த தெறி படம் முதல் நாள் ரூ 13.5 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது, இப்படம் செங்கப்பட்டு பகுதியில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த இடத்தில் சூர்யாவின் 24 ரூ 6 கோடி வசூல் செய்து அடுத்த இடத்தில் உள்ளது, இதை தொடர்ந்து ரஜினி முருகன் ரூ 5 கோடி வசூல் செய்து 3ம் இடத்தில் இருக்க, இதற்கு அடுத்த இடத்தை பிடித்தது நேற்று வெளியான தில்லுக்கு துட்டு தான்.
விரைவில் இப்படத்தின் வசூல் அறிவிக்கப்படும், 5வது இடத்தில் 4 கோடி ரூபாயுடன் அரண்மனை-2 உள்ளது.
0 comments:
Post a Comment